Saturday 4th of May 2024 10:50:55 PM GMT

LANGUAGE - TAMIL
.
போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலைய கைதிகள் இருவர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா!

போதைப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலைய கைதிகள் இருவர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா!


போதப் பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கைதிகள் இருவர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேனபுர பேதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கட்டுள்ள கைதிகள் இருவர் மற்றும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் என மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியர் பிரிவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 2841 இல் இருந்து 2844 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் 3 பேர் குணமடைந்து வெளியேறியதை அடுத்து இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வெளியேறியவர்களது மொத்த எண்ணிக்கை 2579 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 251 ஆக உள்ளதுடன் இதுவரை சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE